December 7, 2016 தண்டோரா குழு
“சசிகலா கட்சி பொறுப்பும் ஏற்கும் நிலையில் அதிமுக இரண்டாக உடைவது உறுதி” என்று பாஜக மாநிலங்கவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை காலமானர். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறது என்ற கேள்வி தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி “அதிமுக உடையும்” என கூறியுள்ளார்.
இது குறித்து சமூக தனது வலைதளத்தில் சுப்பிரமணியன் சுவாமி புதன்கிழமை கூறியுள்ளதாவது:
அதிமுக நிச்சயமாக உடைவது உறுதி. சசிகலா கட்சி பொறுப்பும் ஏற்கும் நிலையில் ஆட்சியையும் கட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைப்பார்.
இதனால், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது.
ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் தம்முடைய குடும்பத்தில் இருந்து ஒருவரைத்தான் சசிகலாவுக்கு எதிராக முன்னிறுத்துவார். ஓ. பன்னீர்செல்வத்துக்குக் கட்சியில் செல்வாக்கு இல்லை. சசிகலாவுக்கு அரசியல் அறிவு இல்லை.இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.