September 9, 2021 தண்டோரா குழு
கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து பத்தாவது முறையாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமை பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்புமிகு டாக்டர் காளிராஜ் துவக்கி வைத்தார். பல்கலைகழக நாட்டுநல பணி திட்டம்,கோவிட் 19 கண்காணிப்பு குழு, ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இதில், மருத்துவக் குழுவினர் பங்கேற்று தடுப்பூசி செலுத்தினர்.
இந்த முகாமில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர். முன்னதாக நடைபெற்ற முகாம் துவக்க நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் முருகவேல்,கோவிட் கட்டுப்பாட்டு குழு தலைவர் முனைவர் மணிமேகலன்,ராமகிருஷ்ணா மருத்துவமனை கட்டுப்பாட்டு அலுவலர் ராம்குமார்,ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் முனைவர் வசந்த்,கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் முனைவர் சுரேஷ் பாபு முனைவர் லோகேஷ்வரன்,ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் தாமஸ்,பேராசிரியை ரூபா குணசீலன்,நாட்டுநலபணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அண்ணாதுரை, மருத்துவமனை நாட்டுநல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகதீஸ்வரன்,செய்தி தொடர்பு அலுவலர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பத்தாவது முறையாக நடைபெற்ற இது.முகாமில் இதுவரை சுமார் 3000 பேர் முதல் மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.