September 10, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியுடன்அறம் பவுண்டேஷன் சாரிட்டபள் ட்ரஸ்ட் மற்றும் ராபர்ட் போஷ் பொறியியல் தீர்வு சிஎஸ்ஆர் ஆகியவை இணைந்து 83 மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்களின் மன நல்வாழ்வுக்கான திட்டத்தை தொடங்கியுள்ளது என கோவை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த டெலி சர்வே மற்றும் கவுன்சிலிங் திட்டம் மூலம் மாநகராட்சி பள்ளியின் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் 1000 மாணவர்கள் பயனடைவார்கள்.
உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோயினால் பள்ளிகள் பல சவால்களை கொண்ட சூழ்நிலைகளை எதிர்கொண்டது. இதனால் மாணவர்களின் மன அழுத்தம், துக்கம், பொருளாதார ,ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைகள்,போன்ற பிரச்சினைகளுக்கு சவாலாக இருந்தது.
இந்தத் திட்டம மூலம் ஒரு தனிப்பட்ட கணக்கெடுப்பை மேற்கொள்வதன் மூலம் இத்தகைய சிக்கல்களை அடையாளம் கண்டு அவற்றை பொருத்தமான ஆதார நபர்களுடன் இணைக்கும். இந்த அறக்கட்டளையின் குழுவில் மனநல மருத்துவர். ஊக்குவிப்பவர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள், வழிகாட்டிகள் உள்ளனர். இவர்கள் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு சரியான தீர்வைக் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதனால் குழந்தைகளின் நம்பிக்கை வெளிப்பட்டு அவர்களின்படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
இந்நிகழ்ச்சியில் கோவை சிஎஸ்ஆர் திட்டத் தலைவர் (ரெபி) பெசீல் ஜான்சன், மைக்கேல் ராஜ் சி.இ.ஓ, கோவை மாநகராட்சி நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் மற்றும் கோகுல்ராஜ் ஜே அறம் பவுண்டேஷன் சாரிட்டபுள் டிரஸ்ட் நிறுவனர் கலந்து கொண்டனர்.