September 10, 2021 தண்டோரா குழு
விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்தும் வீடுகளில் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளித்துள்ளது.
அவரவர் வீடுகளில் வைக்கப்படும் சிலைகளை கரைப்பதற்காக கோவை மாவட்டத்தில் 48 நீர்நிலைகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர் நிலை கரையோரங்களில் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிலைகளை கரைக்க வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நின்று கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கரைகள் தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினிகள் பொடிகள் தூவப்படுகிறது. கொண்டுவரப்படும் சிலைகள் அனைத்தும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை யினரால் குளங்களுக்குள் விடப்படுகிறது. நீண்ட நேரம் அங்கு நிற்க காவல்துறையினர் அனுமதிப்பதில்லை.இதற்காக சிலைகள் கரைக்கப்படும் அனைத்து குளங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.