• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரே நாளில் 1.5.லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு !

September 11, 2021 தண்டோரா குழு

1475 இடங்களில் நடைபெறும் முகாம்கள் ஒரே நாளில் 1.5 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.இதனை அடுத்து கோவை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலரும்,காதி மற்றும் கதர் கிராமிய வாரியத்தின் தலைமை செயல் அலுவலருமான சங்கர் அனைத்து துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் கண்காணிப்பு அலுவலர் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் நடைபெறும் இம்முகாமானது காலை 7 மணி முதல் மாலை 7மணி வரை நடைபெறவுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள், மலைப்பகுதிகள், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகள் என ஊரகப் பகுதிகளில் 1167 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 308 முகாம்கள் என மொத்தம் 1475-இடங்களில் தடுப்பூசி வழங்கும் முகாம்கள் செயல்படவுள்ளது.

இம்முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் மருத்துவமனை பணியாளர்கள், தன்னார்கள் பணியாற்றிட உள்ளனர். அதன்படி ஒரு முகாமிற்கு ஒரு தடுப்பூசி செலுத்துபவர், ஒரு கணினி பதிவாளர், இரண்டு உதவியாளர்கள் என 4நபர்கள் வீதம் 5900 நபர்கள் பணியாற்றவுள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் வயது முதிர்ந்தோர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக தனிபிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 38 லட்சத்து 67 ஆயிரத்து 926 ஆகும். இதில் 27 லட்சத்து 7 ஆயிரத்து 550 நபர்கள் 18 வயதிற்கு மேற்பட்டோர். இதுவரையில் 22 லட்சத்து 3 ஆயிரத்து 34 நபர்கள் முதல் தவணை தடுப்பூசிகளும், 5 லட்சத்து 75 ஆயிரத்து 837 நபர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் என 27 லட்சத்து 78 ஆயிரத்து 871 தடுப்பூசிகள் மாவட்டத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என 5 லட்சத்து 5 ஆயிரத்து 516 நபர்களும், தற்போது இரண்டாம் தவணைக்காக காத்திருப்போர்களாக 1 லட்சத்து 45 ஆயிரத்து 785 (கோவிஷீல்டு), 46 ஆயிரத்து 196 (கோவாக்சின்) என 1 லட்சத்து 91 ஆயிரத்து 981 நபர்களும் உள்ளனர். 1475 இடங்களில் நடைபெறும் முகாம்கள் மூலம் சுமார் 1.5 லட்சம் மக்கள் தடுப்பூசி பெற்று பயனடையும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கண்காணிப்பு அலுவலர் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி மையங்களான புலியகுளம் புனித அந்தோணியார் மேலநிலைப்பள்ளியிலும், உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், வ.உ.சி மைதானத்திலும் நேரில் பார்iவியட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க