September 11, 2021 தண்டோரா குழு
கோவையில் இரண்டாவது வாரமாக ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 1-ம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 8 சாலைகள், திருச்சி சாலையில் சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை , அவினாசி சாலையில் உள்ள ஆறு சாலைகள், காந்திபுரம் 1 முதல் 11 வரையிலான பகுதிகள் உள்பட பல்வேறு சந்திப்புகள் வீதிகள் ஆகிய பகுதிகளில் இயங்கும் அத்தியாவசியமான மருந்தகம்,பால்,மளிகை கடைகள் காய்கறிகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் இரண்டாவது வாரமாக அடைக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 32 டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள அனைத்து நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டதால் அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.