• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 7 மையங்களில் இன்று நீட் தேர்வு !

September 12, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் நீட் தேர்வினை 7 மையங்களில் 6,057 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.மருத்துவ படிப்பில் சேர நடப்பாண்டிற்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வு மையங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது.
அதன்படி, குரும்பப்பாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் 960 பேர், சூலூர் ரத்தினவேலு சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில்(ஆர்.வி.எஸ் கல்லூரி) 960 பேர், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்லூரி 960 பேர், கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் 960 பேர், ஸ்ரீ சரஸ்வதி வித்ய மந்திர் பள்ளியில் 417 பேர், கற்பகம் அகாடமி ஆப் ஹயர் எஜூகேசன் 960 பேர், நேஷனல் மாடல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 840 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர்.

கடந்த ஆண்டை போலவே தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க