• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேற்கு வங்க ரயில் விபத்தில் 2 பலி, 6 காயம்

December 7, 2016 தண்டோரா குழு

மேற்கு வங்கத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 6) ரயில் தடம்புரண்டதால் இருவர் உயிரிழந்தனர். ஆறு பேர் படு காயமடைந்தனர்.

இது குறித்து வட கிழக்கு எல்லைப்புற ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் (சிபிஆர்ஓ) பிரணவ் ஜோதி சர்மா செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை கூறியதாவது:

விரைவு ரயில் பிகார் மாநிலம் பாட்னாவிலிருந்து மேற்கு வங்க மாநிலம் குவாஹத்திக்குச் சென்று கொண்டிருந்தது. மேற்கு வங்கத்தில் செவ்வாய்க்கிழமை ரயில் தடம்புரண்டது. அதில் இருவர் இறந்தனர். ஆறு பேர் படு காயமடைந்தனர். சில வாரங்களுக்கு முன் நடந்த ரயில் விபத்தில் 150 பேர் இறந்தனர்.

அலிபுர்தார் மாவட்டத்தில் உள்ள சமுக்டாலா ரோடு நிலையத்தில் ராஜேந்திர நகர் குவாதி கேபிடல் எக்ஸ்பிரஸ் தரம் புரண்டது. அம்மாவட்டத்தின் ரயில்வே பிரிவு தலைமையகத்துக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சமுக்டாலா ரோடு நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது. அடையாளம் தெரியாத இரண்டு ஆண் சடலங்களும் காயமடைந்த ஆறு பேர் தடம் புரண்ட ரயில் பெட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்திரஜித் மண்டல், 25, பரீட்சித் மண்டல், 40, ப்ரீதம் மண்டல்,16, ரூபா மண்டல், 34, ஷா ஜமால் ஷேக், 35, சுரேந்திர பிரசாத், 38 காயம் அடைந்தவர்கள் ஆவர். இறந்தவர் யார் என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே மருத்துவர்கள் விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாதிக்கப்படாத 19 ரயில் பெட்டிகள் பிரிக்கப்பட்டன. ரயில் புதன்கிழமை காலை 5.10 மணியளவில் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது. மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. குறுகிய கால நேரத்திற்கு இரண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டன. இந்த விபத்தைத் தொடர்ந்து எட்டு ரயில்கள் திருப்பி விடப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க