September 13, 2021 தண்டோரா குழு
கோவை கரும்புக்கடை பகுதியில் ராஜவாய்க்கால் தூர் வாரும் பணியை பொள்ளாச்சி திமுக எம்பி சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கோவை மாநகராட்சி 86 வது வார்டு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளாலும், குப்பை மற்றும் புதர்களாலும் நிறைந்து கிடந்த ராஜவாய்க்காலை தூர்வார வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், பொள்ளாச்சி திமுக எம்பி சண்முகசுந்தரம் இந்த வாய்க்காலை தூர்வார மாநகராட்சி கமிஷனரிடம் கூறினார்.
இதையடுத்து, நேற்று பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.
இப்பணியை திமுக எம்பி சண்முக சுந்தரம் துவக்கி வைத்து நிருபர்களிடம் கூறுகையில்,
‘‘தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து,மக்களின் முதல்வரான மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகிறார். இந்நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று கோவை மாநகராட்சி 86வது வார்டிற்கு உட்பட்ட கரும்புக்கடை பகுதியில் உள்ள ராஜவாய்க்காலை தூர்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்த நிகழ்வில், கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், பகுதி கழக பொறுப்பாளர் ஜலாலுதீன், குறிச்சி பகுதிகழக பொறுப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.