September 16, 2021 தண்டோரா குழு
சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் உட்பட 3.08 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் செய்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 14ம் தேதி வழக்கம் போல் சோதனை நடத்தினர். அப்போது சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த 6 பேர் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில் உடமைகளை மறைத்து கொண்டு வரப்பட்ட 1.92 மதிப்பிலான 3985 கிராம் தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் என 1.16 மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பரிந்துரை செய்யப்பட்ட மொத்த தங்கம் மற்றும் பொருட்களின் சந்தைமதிப்பு 3.08 கோடி இருக்கலாம் எனக் கூறியுள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 6 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.