• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஏதர் மின்சார் வாகனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் இன்று துவக்கம்

September 16, 2021 தண்டோரா குழு

கோவையில் ஏதர் மின்சார் வாகனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் இன்று துவங்கப்பட்டுள்ளது.

கோவை ராம்நகர் பகுதியில் ஏதர் மின்சார வாகன (எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்) விற்பனையகம் இன்று துவங்கப்பட்டுள்ளது.

ராஜ்துரை இ-வெய்கில்ஸ் நிறுவனத்தினர் தொடங்கியுள்ள இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் ஏதர் நிறுவனத்தின் துணை தலைவர் நிலாய்சந்திரா கலந்து கொண்டு புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து விற்பனையக நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி மற்றும் முதன்மை இயக்குனர் வைஷ்ணவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கோவையில் முதல் ஏதர் விற்பனையகம் இன்று துவங்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களில் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.இந்த வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிலோ மீட்டர் முதல் 100 வரை பயணிக்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்ய 3.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.இதன் மூலம் பெட்ரோல் வாகனத்தை காட்டிலும் பல மடங்கு பணத்தை சேமிக்க முடியும்.

ஒரு மாதத்திற்கு ரூ.800 ரூபாய் மட்டுமே மின்சாரத்திற்காக செலவாகும்.இந்த வாகனத்திற்கு ஆயில் உள்ளிட்ட உபகரணங்கள் தேவையில்லாத காரணத்தால் ஒவ்வொரு 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்திற்கு ஒருமுறையும் ரூ.ஆயிரம் ரூபாய்க்குள் சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

திருடு போவதை தடுத்தல், பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தல், ப்ளூடூத், கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த வாகனத்தில் உள்ளன.
இந்த வாகனத்தின் விலை ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க