• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம்

September 20, 2021 தண்டோரா குழு

மத்திய பா.ஜ.க.அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திமுக சார்பில் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் – டீசல் – சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும், விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு,தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்ட மத்திய பா.ஜ.க.அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.கூட்டணி கட்சிகள் சார்பாக கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்ஒரு பகுதியாக கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் திமுக நிர்வாகியான விஷ்ணு பிரபு தலைமையில் அவரது இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சுந்தர்,இலக்கிய அணி சிங்கை பகுதி துணை அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் தேவராஜ்,சுப்பிரமணி,சந்தோஷ், கண்ணன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் விஷ்ணு பிரபு இல்லம் முன்பாக கருப்பு கொடி ஏந்தி மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதால்,கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் வீடுகளுக்கு முன் போராட்டம் நடத்தி உள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க