• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தற்போதைக்கு 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ்

September 23, 2021 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தனியார் பள்ளி நிர்வாகிகள், கொரோனா காலத்தில் பள்ளிகள் நடத்துவதில் உள்ள சிக்கல்களை தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல வேண்டுமென்றால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மேலும் கல்விதுறை நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இது குறித்து மேலும் ஆலோசனை எடுக்கப்பட வேண்டும் என கூறினார்.

கோவையில் தனியார் பள்ளிகள் 1ம் வகுப்பு முதல் திறக்க வேண்டும் என்றும் மாணவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இருப்பினும் பெற்றோர்களிடையே பயம் இருக்க தான் செய்கிறது என தெரிவித்தார். பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அதனை வெளியில் தெரிவிக்காமல் இருப்பது தவறுதான் என கூறிய அவர் உடனடியாக் தகவல் தெரிவிக்க வேண்டுமென கூறினார்.

மேலும் நீட் தேர்வு தொடர்பாக சட்ட போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் வயது வரம்பு உயர்த்தப்பட்ட பரிசீலனை செய்யப்படுன் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க