• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனாவுக்கு பின் தமிழக ஜவுளித்துறையில் புதிய முதலீடுகளில் ஆர்வம் – ஐடிஎப் சர்வே தகவல்

September 27, 2021 தண்டோரா குழு

இது குறித்து இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவிட்டுக்குப்பின் உலக அளவில், குறிப்பாக ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியாவுக்கும், ஜவுளித்துறைக்கு சாதகமாக உள்ள சூழலை, தமிழக ஜவுளித் துறை எப்படி எதிர்நோக்குகிறது என்பதை அறிந்துகொள்ள, எங்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களான தொழில்முனைவோரிடம் சர்வே எடுக்கப்பட்டது.

ஜவுளி உற்பத்தி சங்கிலித் தொடரில் உள்ள, நூற்பாலைகள், ஒட்டுமொத்த கட்டமைப்பை வைத்துள்ள நிறுவனங்கள், ஆயத்த ஆடை நிறுவனங்கள், வீவிங், சாய ஆலைகள் மற்றும் ஹோம் டெக்ஸ்டைல்ஸ் துறையைச் சார்ந்த 257 நிறுவனங்கள் இந்த சர்வேயில் பங்கு பெற்றன.
இந்த 257 நிறுவனங்களில் ஒட்டுமொத்த வருடாந்தர வியாபார மதிப்பு ரூபாய் 36,000 கோடியாகும்.

தற்போதைய வியாபாரத்தை இரட்டிப்பாக்க தேவைப்படும் காலம்:

தற்போது நடைபெறும்
வருடாந்திர வியாபாரத்தை, எத்தனை வருடங்களில் இரட்டிப்பாக்க திட்டம் வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, 30% பேர் 3 வருடத்தில் (25% வருடாந்திர வளர்ச்சி), 18% பேர் நான்கு வருடத்தில் (20% வருடாந்திர வளர்ச்சி 26% பேர் ஐந்து வருடத்தில் (15% வருடாந்திர வளர்ச்சி) என்று தெரிவித்துள்ளனர்.

ஏறத்தாழ 76% நிறுவனங்கள் புது முதலீடுகளை மேற்கொண்டு 3 முதல் 5 வருடங்களுக்குள், தங்களது வியாபாரத்தை இரட்டிப்பாக்க முயல்கின்றனர் என்பது, தமிழக ஜவுளித் துறையில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.ஜவுளி உற்பத்தி சங்கிலித் தொடரில் உள்ள பல்வேறு துறைகளில், முதலீட்டு ஆர்வம் ஹோம் டெக்ஸ்டைல்ஸ் துறை மற்றும் ஆயத்த ஆடை மற்றும் வீவிங் துறைகளில் அதிகமாக காணப்படுகிறது.தமிழகம் மதிப்புக்கட்டப்பட்ட
ஜவுளி பொருட்கள் தயாரிப்பில், முன்னணி பெறுவதற்கு இந்த முதலீடுகள் உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஜவுளித்தொழிலில் இளம் தலை முறையினரின் ஆர்வம்:

இளம் தலைமுறையினர், இந்த ஜவுளி உற்பத்தித் துறையில் ஆர்வம் காட்டுகின்றனவா என்ற கேள்விக்கு, 58% பேர் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் என்றும், 31% பேர் குறைவான ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் பதில் அளித்து இருந்தனர்.

இளம் தலைமுறையினரிடையே இத்தொழில்கள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், அவர்களின் புதிய சிந்தனைகளுக்கும், தொழில்நுட்பம் சார்ந்த போக்கிற்கும், ஏதுவான வியாபாரத்தை இத்துறையிலேயே கொண்டு வருவதற்கும், எங்களைப்போன்ற தொழில் முனைவோர் சங்கங்கள் செயல்பட்டால், இந்த 31 சதவீத பேரையும் ஆர்வம் மிக்கவர்களாக மாற்ற முடியும்.

பங்கு சந்தைகளின் பங்குகளை பட்டியலிடுதல் :

பங்குசந்தைகளில், உங்கள் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிட திட்டம் உள்ளதா என்ற
கேள்விக்கு 16% பேர் (40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்) ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்திய பங்குச்சந்தையின், மொத்த மதிப்பு 240 லட்சம் கோடியாக இருக்கும் இன்றைய நிலையில், பட்டியலிடப்பட்ட ஜவுளி நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு வெறும் 2 லட்சம் கோடியாக மட்டுமே உள்ளது.

இந்திய பங்குச் சந்தை வளர்ந்துவரும் நிலையில், குறிப்பாக ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் நல்ல மதிப்பு பெற்று வருவதாலும், தமிழக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள்,இந்த வாய்ப்பை பயன்படுத்தி பங்குச் சந்தைகளில் பட்டியலிட முயற்சி எடுக்க முன்வந்திருப்பது நல்ல அறிகுறியாக நாங்கள் நினைக்கிறோம்.

ஆர்வமுள்ள நிறுவனங்களின், இந்த பங்குச் சந்தை முயற்சியை முன்னெடுக்க எங்கள் ITF சங்கம் உதவும் பொருட்டு ஒரு நிபுணர்கள் குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளோம். சீனாவிலிருந்து இந்திய ஜவுளித்துறைக்கு நகரும் ஏற்றுமதி வியாபார வாய்ப்புகள், மத்திய அரசின் முக்கிய அடிப்படை சீர்திருத்தங்கள், தமிழக அரசின் சீரிய தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டங்கள், வங்கிகளில் குறைந்த வட்டியில் தாராளமாக புது முதலீடுகள் செய்ய கடன் கிடைப்பது, தமிழகத்தின் பலமாக ஜவுளி உற்பத்தித் துறை கட்டமைப்பு தற்போது உலக அளவில் கவனம் பெற ஆரம்பிப்பது போன்ற காரணங்களால் இத்தகைய முதலீட்டு ஆர்வம் அதிகரித்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

புது முதலீடுகளை சரியான துறைகளில், குறிப்பாக மதிப்புக்கூட் கட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் செய்யவும், இளைய இரண்டாம் தலைமுறை தொழில் முனைவோரின் ஆர்வத்தை அதிகப்படுத்துவதுற்கும், நன்றாக இயங்கும் நிறுவனங்களை இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளை பட்டியலிடுவதற்கும், எங்கள் ITF அமைப்பு உதவியாக இருக்கும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க