October 1, 2021 தண்டோரா குழு
ஏ.ஜி.டி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன், இரத்தினம் கல்வி குழுமம் இணைய வழி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஈச்சனாரி பகுதியிலுள்ள ரத்தினம் கல்லூரியில் நடந்தது.
இரத்தினம் கல்லூரியில் கோவையைச் சேர்ந்த ஏ.ஜி.டி எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனமும், இரத்தினம் கல்வி குழுமமும் இணைந்து இணைய வழி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏ.ஜி.டி எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருணா தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் தலைமை விகித்தார். இவர்கள் இணைய வழி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த இணைய வழி புரிந்துணவு ஒப்பந்தத்தின் மூலமாக, மாணவர்கள் படிக்கும் போதே நிறுவனத்தில் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) பெற முடியும். இந்த நிறுவனத்தின் பொறியாளர்கள், மாணவர்களுக்கு நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சியை கல்லூரிக்கு வந்தும், நிறுவனத்திலும் பயிற்சி அளிப்பார்கள்.
மேலும், ஆசிரியர்கள் தங்களது கண்டுபிடிப்புகளையும் புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இந்த நிறுவனத்துடன் இணைந்து வெளியிடலாம். மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் இந்த நிறுவனம் வழங்க உள்ளது.
நிகழ்ச்சியில் இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதன்மை நிர்வாகி டி.நித்தியானந்தம் , இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் பி.நாகராஜ் , இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் துணை முதல்வர் கே.கீதா, இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர்.மாணிக்கம் , இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஆர்.முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.