• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தின் சார்பில் டிஜிட்டல் விழிப்புணர்வு பாட் துவக்கம்

October 1, 2021 தண்டோரா குழு

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நாளில் ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சைமையத்தின் சார்பில் டிஜிட்டல் விழிப்புணர்வு பாட் துவக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் அனுசரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய், தடுக்கும் வாய்ப்பை அதிகமாக கொண்டது. இருப்பினும், சர்வதேச அளவில் இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பிரச்னையாகவே உள்ளது.

இது குறித்து, கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.குகன் கூறியதாவது:

இந்திய பெண்களிடையே பொதுவாக காணப்படும் புற்றுநோய் வகைகளில், 14% பேருக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்படுகிறது.நான்கு நிமிடத்துக்கு ஒரு பெண்ணுக்கு மார்பக புறு்றுநோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வருகிறது. கிராமப்புறமாக இருந்தாலும், நகர்ப்புறமாக இருந்தாலும் மார்பக புற்றுநோய் அதிகாரித்து வருகிறது.

2018ம் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், “1,62,468 பேருக்கு புதியதாக மார்பக புற்றுநோய் பதிவாகியுள்ளது. 87,090 பேர் இறந்துள்ளனர்” என, தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றிய நிலையிலான புற்றுநோய் வளர்ச்சி இருப்பின், உயர்வாழ்வது மிகவும் கடினமாகிறது. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்திய பெண்கள், 3 மற்றும் 4 ம் நிலை மார்பக புற்றுநோயால் அவதிப்படுகின்றனர்.

புற்றுநோய் சிகிச்சைக்குப்பின் மார்பக புற்றுநோயால் உயிருடன் வாழும் பெண்களின் அளவு 60% ஆக உள்ளது. இதுவே அமெரிக்காவில் 80% ஆக உள்ளது. பெண்கள் தமாகவே தங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதை, கட்டிகள் அல்லது தசை வளர்ச்சி உள்ளதா என்பதை சுய பரிசோதனை செய்து அறிந்து கொள்ள முடியும். குறைந்த அளவு பெண்களே இந்த புற்றுநோயால் உயிர் வாழ காரணம், பெரும்பாலான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லை. வரும் முன் காக்க முன்னதாகவே பரிசோதனை செய்து கொள்வதில்லை.

ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களிடைய புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முன்னணியில் இருந்து வருகிறது. சிறிய அளவிலான விழிப்புணர்வு படங்கள், நிகழ்ச்சிகள், பல வடிவங்களிலான டிஜிட்டல் விழிப்புணர்வு தளங்கள், இலவச அழைப்பு தொலைபேசிகள், இ-புக் போன்றவைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறை தொழில் நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக, “பிங்க் – பாட்” என்ற புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பொதுவாக அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இவை உருவாக்கப்பட்டுள்ளது. பிங்க் பாட் என்பது, ரோபக்களைக் கொண்டு தட்டச்சு உரையாடல் வழியில், வாட்ஸ் ஆப் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

ஒருவர், ஹி என்ற தட்டச்சு வார்த்தையை, +919739738558 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் பில் உள்ளீடு செய்தால், உரையாடல் துவங்கும்.
இந்த உரையாடல், மார்பக புற்றுநோய் உட்பட, பல்வேறு புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளுக்கும் விடையளிக்கும். வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தியாக மட்டுமின்றி, ப்ளு டுத் குரல் ஒலியாகவும், இணையத்தள வழி விழிப்புணர்வாகவும், “பாட்”டில் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் மருத்தவமனையின் தலைமை இயக்குனர் ஸ்வாதி ரோஹித், பிங்க் பாட் ஐ, துவக்கி வைத்தார். இந்த மாதம் முழுவதும் அனைத்து வேலை நாட்களிலும் மார்பக கட்டி அறிகுறிகள் உள்ள மற்றும் 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மம்மோகிராம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த இலவச மார்பக பரிசோதனை முகாமை, கோவை, எஸ்.என்.ஆர் சன்ஸ் பொது நல அறக்கட்டளை அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி துவக்கி வைத்தார். அவர், பரிசோதனையின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும், பல லட்சம் பேர்களின் உயிரை காக்க, பரிசோதனையை முன்பாகவே செய்து கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார். நிறுவனத்தின் டீன் சுகுமாரன், தலைமை செயல் அதிகாரி ராம்குமார் மற்றும் பணியாளர்கள்/ மாணவர்கள்/ பொதுமக்கள் நிகழ்வில் பங்கேற்றனர். தலைமை கதிர்வீச்சியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.கார்த்திகேசு நன்றி கூறினார்.

மேலும் படிக்க