• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சி பகுதிகளில் அனுமதியற்ற தனி மனைகளை வரன்முறை செய்து கொள்ள சிறப்பு முகாம்

October 5, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் உள்ள விற்கப்பட்ட தனி மனைகளை வரன்முறை செய்து கொள்ள, கோவை மாநகராட்சி ஐந்து மண்டல அலுவலங்களிலும் வரும் 11ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடத்தப்படவுள்ளது என மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கூறியிருப்பதாவது:

ஜனவரி 1ம் தேதி 1980க்கு பின்னர் அக்டோபர் 20ம் தேதி 2016ம் ஆண்டுக்கு முன்னர் பத்திரபதிவு செய்த மனைகள். கோவை உள்ளூர் திட்டக் குழுமத்தால் எஸ்.பி.எப் எண் வழங்கப்பட்ட மனைப்பிரிவுகள். திட்ட சாலைகள், நிலஎடுப்பு உச்சவரம்பு, நீர்நிலைகள், விவசாய பூமி, அரசு புறம்போக்கு, பொது ஒதுக்கீடு இடங்கள், கோபுர மின்கம்பிகள் உட்பட உயர் அழுத்த மற்றும் அதிக உயர் அழுத்த மின் கம்பிகளின் கீழ் அமையும் மனைகள் ஆகியவற்றில் அமையாத மனைகள் போன்றவை வரன்முறை செய்துகொள்ள தகுதியான மனைகள் ஆகும்.

கட்டிட விதிகளில் குறிப்பிட்டுள்ள தொழில்சார்ந்த வல்லுநர்கள் கையொப்பமிட்ட தளவரைபடத்தை காட்டும் வரைபட நகல்கள் மூன்று. மனை பரிமாணம், சாலையின் அகலம், மனைப்பிரிவு அமைந்துள்ள கிராமத்தின் நில அளவை எண்கள் போன்றவைகள் அடங்கிய மனைப்பிரிவு வரைட்டத்தின் நகல் ஒன்று. மனைப்பிரிவு அமைந்துள்ள பகுதியின் சுற்றுபுறங்களில் உள்ள வளர்ச்சி மற்றும் இணைப்பு சாலைகளை காட்டும் சுற்றுபுற வரைபடத்தின் நகல் ஒன்று.

சுயசான்று அளிக்கப்பட்ட மனையின் விற்பனை ஆவணம். விண்ணப்பதாரர் பெயரில் பெறப்பட்ட பட்டா. விண்ணப்பம் செய்யப்படும் நாளிலிருந்து அதற்கு முன்னர் ஒருவார காலத்திற்குள் பெறப்பட்ட வில்லங்க சான்றிதழ். மனைப்பகுதி விவசாய நிலத்தில் அமையுமாயின் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பெறப்பட்ட சான்று அல்லது அதன் நிலை குறித்த அறிக்கை சமர்பிக்க வேண்டும் போன்றவை மனை வரன்முறை செய்ய சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ஆகும்.

மேலும் மனை வரன்முறை கட்டணம் சதுர மீட்டர் ஒன்றிற்கு ரூ.150 அரசு கணக்கில், இணையதளத்தில் செலுத்தப்பட வேண்டும். அபிவிருத்தி கட்டணம் சதுர மீட்டர் ஒன்றிற்கு ரூ.500 மாநகராட்சி கணக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பெரியகடைவீதி கிளையில் செலுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க