October 9, 2021 தண்டோரா குழு
கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் மக்களவை உறுப்பினர் உத்தம்ரெட்டி மற்றும் காங்கிரஸின் கே.எஸ்.அழகிரி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய உத்தம்ரெட்டி,
இந்தியாவிற்குள் அதிகளவு போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. அமேசான் இ.காமாஸ் நிருவனம் சட்டகட்டணம் என்ற பேரில் 8,546 கோடி வழங்கியுள்ளதாகவும் இது குறித்து கேட்டால் மத்திய அரசு மெளனம் காத்து வருவதாக தெரிவித்தார். ஒரு வருடத்தில் 1 கோடி மக்களுக்கும் மேல் வேலை இழந்துள்ளனர். லக்கிம்பூம் சம்பவத்தில் மோடி மற்றும் அமித்ஷா அமைதியாக இருப்பதாகவும் உ.பி. முதல்வரும் மெளனமாய் இருப்பதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி,
மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறைக்கு வருடாந்திர வரவு-செலவே ரூபாய் 1,100 கோடியாக உள்ளபொழுது, அமெரிக்காவின் இ-நிறுவனமான அமேசான் மத்திய அரசுக்கு சட்ட கட்டணம் என்று ரூபாய் 8,546 கோடி வழங்கியுள்ளதாகவும், ஆனால் அதனை பற்றிய எவ்வித செய்தியும் இல்லாமல் மத்திய அரசு மவுனம் காப்பதாகவும் தெரிவித்த அவர், இதனால் சிறு குறு தொழிலாளிகள் பாதிக்கப்படுள்ளனர் என்றார்.
நாம் தமிழர் கட்சி சீமான் சமீபகாலங்களாக காங்கிரஸ் கட்சியை ஏற்க்கதகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகின்றார். தகுந்த வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்யமாறு கேட்டுக்கொண்டார். சீமானின் கொள்கைகள் எடுப்படாத நிலையில், இதுபோன்ற விமர்சனங்களை செய்து வருகின்றார்.அரசியல் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் வன்முறை பேசுவதால் விளம்பரம் தேடிகொள்கிறார். சென்னையில் DGP சைலேந்திரபாபுவிடம் இதனைப் பற்றி புகார்க்கொடுத்ததாகவும் மேலும், 7 தினங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது முழுக்க கட்சி சேர்ந்த புகாரே தவிர தனிப்பட்ட புகார் இல்லை என்று குறிப்பிட்டார்.
விமர்சனங்கள் என்பது பொதுவானவையே ஆனால் சீமான் அவர்கள் தவறான வர்த்தைகளை பயன்படுத்தி தவறான ரீதியில் விமர்சனம் செய்வது ஏற்க்கத்தக்க வகையில் இல்லை என்ற அவர், இது போன்ற சம்பவங்களை அரசாங்கம் தான் தடை செய்யவேண்டும் என்றார். இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறினார்.