December 10, 2016 தண்டோரா குழு
எம்.ஜி.ஆர் நினைவிடத்தை “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம்” என்று பெயர் மாற்றம் செய்யக் கோரி, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் விவரம் வருமாறு:
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் “பாரத ரத்னா” விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்த வேண்டும்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவிற்கு முழு உருவ வெண்கலச் சிலையை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
ரூ.15 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.