October 18, 2021 தண்டோரா குழு
தமிழ்நாடு காவல்துறை மற்றும் voice of voiceless என்ற அமைப்பு (முன்னாள் காவல்துறையினர்) சார்பில் “Prevention of Custodial Violence”என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் C.சைலேந்திர பாபு. வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு காவல் துறை கூடுதல் இயக்குனர் K.சங்கர் தலைமையில்,கோவை மண்டலம், கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகர காவல் துறையினருக்கு, தமிழ்நாடு காவல்துறை மற்றும் voice of voiceless என்ற அமைப்பினரும் (முன்னாள் காவல்துறையினர்) இணைந்து “Prevention of Custodial Violence”என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் கோவை மாநகர காவல் ஆணையர், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர், கோவை சரக துணைத் தலைவர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோவை மாநகர காவல் துணை ஆணையர்கள், கோவை மாவட்ட சிறப்பு நீதிபதி.A.S. ரவி, வழக்கறிஞர் V.P சாரதி, U. சங்கரநாராயணன்,DDP(Rtd) மற்றும் முன்னாள் காவல்துறையினர் ஆகியோர் பங்கேற்று சட்ட வழிமுறை களையும் அவர்களது அனுபவங்களையும் எடுத்துக் கூறினார்கள்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் C.சைலேந்திர பாபு வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். இதில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு பண வெகுமதியும் வழங்கப்பட்டது. மேற்படி கருத்தரங்கில் “Prevention of Custodial Violence”என்ற தலைப்பில் கட்டுரை எழுதி சமர்ப்பித்த சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர், அருணுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.