October 18, 2021 தண்டோரா குழு
கோவை மத்திய சிறையில் சட்டம் மற்றும் சிறைதுறை அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சிறை கைதிகளின் கோரிக்கிகைகளை கேட்டறிந்தேன் எனவும் சிறைச்சாலை என்பது தவறு செய்தவர்கள் திருந்தி வாழ்வதற்கான இடமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.சிறைக்கு வருபவர்களுக்கு அனைத்து வகையாக பயிற்சிகள் அளிக்கபட்டு சிறையில் இருந்து வெளியில் செல்கையில் வாழ்வாதரத்தை மேம்படுத்தி வருவாய் ஈட்டும் வகையில் அமைந்துள்ளது.
10 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்கள் முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வைக்கபட்டதாகவும் இது தொடர்பக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் விரைவில் தகுதியான நபர்கள் விடுதலை செய்திட நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாக தெரிவித்தார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் விடுதலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழக முதல்வர் 7 பேர் விடுதலையில் முழு முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார்.
கோவை மத்திய சிறைசாலை இட மாற்றம் செய்யபடுமா என்ற கேள்விக்கு முன்னால் முதல்வர் கருணாநிதி இங்கு செம்மொழி பூங்கா அமையும் என தெரிவித்து இருந்தார் எனவும் இட மாற்றம் குறித்து அரசின் கவனதிற்க்கு கொண்டு செல்லபட்டு முதல்வரின் முடிவுக்கு விடபட்டு உள்ளது என்றவர் தமிழக சிறைகள் அனைத்தும் புதுப்பிக்கபட்டு நவீன மயமாக்கபட வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம் எனவும் தெரிவித்தார்.
திறந்த வெளி சிறைச்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம் என்றும் அதற்கான இடங்கள் தேர்வு செய்யபட வேண்டும் என்றார்.மத்திய சிறைச்சாலை மாற்றபடும் பட்சத்தில் இந்த இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என என தெரிவித்தார்.எல்லா மத்திய சிறைச்சாலையில் திறந்த வெளி சிறைச்சாலை உருவாக்கிட வேண்டும் என்பது அரசின் நோக்கம் என தெரிவித்த அவர் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என்றார்.
எட்டாம் மற்றும் பத்து 12ம் வகுப்பு தேர்வுகள் எழுத சிறைவாசிகளுக்கு அனுமதிக்கபட்டு வருவதாகவும் உரிய பயிற்ச்சிகள் வழங்கபடுவதாக தெரிவித்த அமைச்சர் கல்லூரி படைப்புகளுக்கு தேவையான பயிற்ச்சிகள் பெறவும் ஏற்பாடுகள் செய்யபடுவதாக அப்போது தெரிவித்தார்.14 ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கபட்ட சிறைவாசிகளுக்கு 10 ஆண்டுகள் நிறைவு செய்து நன்னடத்தை காரணமாக விடுவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் நிபந்தனைக்கு உட்பட்டு மற்ற கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அரசு மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கபடும் என்றார்.
அனைவருக்கும் பொதுவான முதல்வராக ஸ்டாலின்கோவை மத்திய சிறையில் இன்று ஆய்வு மேற்கொண்டதாகவும் சிறை கைதிகளின் கோரிக்கிகைகளை கேட்டதாக கூறிய அமைச்சர் சிறைச்சாலை என்பது தவறு செய்தவர்கள் திருந்தி வாழ்வதற்கான இடமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது என தெரிவித்தார். சிறைக்கு வருபவர்களுக்கு அனைத்து வகையான பயிற்சசிகள் அளிக்கபட்டு சிரையில் இருந்து வெளியில் செல்கையில் வாழ்வாதரத்தை மேம்படுத்தி வருவாய் ஈட்டும் வகையில் அமைந்துள்ளது என்பது என தெரிவித்தார்.
தமிழக சிறைகள் அனைத்தும் புதுப்பிக்கபட்டு நவீன மயமாக்கபட வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம் எனவும் தெரிவித்தார்.
அனைவருக்கும் பொதுவான முதல்வராக ஸ்டாலின் செயல்படுவதாக கூறியவர் Prison Bazaarன் உற்பத்தி கொரோனா காலகட்டத்தில் குறைந்ததாகவும் தற்போது அதிகரித்து உள்ளது எனவும் அப்போது தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகளி சோதனை குறித்த கேள்விக்கு அது அரசின் முடிவு எனவும் அது குறித்து தான் பதில் அளிக்க முடியாது.ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி ஹெச் ராஜா மீது அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டும் இதுவரை கைது செய்யபடாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பினையில் வர முடியாத பிடிவாரண்டை நீதிமன்ற உத்தரவு போலீசாருக்கு கிடைக்க பெற வேண்டும் எனவும் ஹெச் ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது என தெரிவித்தார்.இதில் மாவட்ட ஆட்சியர் மாநகர காவல் ஆணையாளர் மாநகராட்சி ஆணையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.