October 21, 2021 தண்டோரா குழு
தி.மு.க.அரசின் கோவிலில் உள்ள தங்க நகைகளை விற்கும் திட்டத்தால் பல்வேறு ஊழல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக பா.ஜ.க.சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹீம் கோவையில் தெரிவித்துள்ளார்.
பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராகிம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவருடன் கோவை மாவட்ட பாஜக மாநகர மாவட்ட தலைவர் நந்தகுமார் பொதுச்செயலாளர் ரமேஷ் மற்றும் கோவை மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் கணபதி ஜான்சன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வேலூர் இப்ராஹீம்,
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கம் பகுதி அருகே உள்ள தியாகி சிவராம் நகர் பகுதியில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகும் பிரச்சனை உள்ளது. இதுவரை அப்பிரச்சனையை திமுக அரசாங்கம் செய்யவில்லை இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு தேவை பிரச்சனை சரி செய்யப்படாவிட்டால் மாநகராட்சி முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஏழை இஸ்லாமிய குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிப்பதற்கான உதவியை கோவை மாவட்ட பாஜக செய்துள்ளது.தொடர்ந்து இஸ்லாமியர்களின் வாழ்வாதாரம் காப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. பணியிட மாற்றம் பணியிடை நீக்கம் உள்ளிட்ட செயல்பாடுகளால்
அரசு ஊழியர்களின் எதிர்ப்பை திமுக அரசு பெற்று வருவதாக குறிப்பிட்ட அவர்,திமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சீர்கெட்டு போயிருக்கிறது.
காவல்துறையை வைத்து என்னை மிரட்டுகிறார்கள். தர்காவிற்கு செல்லும் போது என்னை வழிமறித்து கைது செய்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். கோவிலில் உள்ள தங்க நகைகளை விற்கும் திட்டத்தால் பல்வேறு ஊழல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயலில் திமுக அரசாங்கம் ஈடுபடுகிறது.
திருமாவளவனை திருநங்கைகளோடு கூட ஒப்பிட முடியாது. பிரதமரை கொலைகாரன் என்று கூறும் இவர்கள் தேச விரோதிகள். மின்சார வாரியம் குறித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை அல்ல.ஆதாரம் இல்லாமல் ஒருபோதும் பாஜக எந்த குற்றச்சாட்டையும் முன் வைப்பதில்லை என அவர் கூறினார்.