October 21, 2021 தண்டோரா குழு
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த தடை விதித்திருந்தது. ஆகையால் கோவையில் டீக்கடைகள், பேக்கரிகள் ஹோட்டல்கள், மளிகைகடைகள். மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதற்கு கோவை மாநகராட்சி தடை விதித்து அவ்வப்போது மேற்குறிப்பிட்ட இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடகோவை பகுதியில் உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு செயல்பட்டு 5 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தி வருவது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் 120 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர் மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தியதற்காக அக்கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ 15,000 அபராத தொகையாக விதிக்கப்பட்டது.