December 12, 2016 தண்டோரா குழு
வர்தா புயல் பாதிப்பால் வடசென்னை மற்றும் வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது (டிசம்பர் 12) வர்தா புயல் கரையை கடந்து வருகிறது. வர்தா புயல் மரக்காணம் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை மையம் கொண்டிருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழை , பலத்த காற்று காரணமாக ஒட்டுமொத்தமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் ,வர்தா புயல் கரையைக் கடக்கும் இடங்களாக வடசென்னை மற்றும் வல்லூர் பகுதிகளை குறிப்பிட்டிருந்தது.
அப்பகுதிகளில் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்து வருகின்றன. புயலின் தாக்கத்தால் வடசென்னை மற்றும் வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் கல்பாக்கம் அணு உலையின் நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் அது பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.