October 30, 2021 தண்டோரா குழு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்தின் சார்பில் தீபாவளி நெரிசலை சமாளிக்க கோவை கொடிசியா வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நவ 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு, சேலம், திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் போன்ற பகுதிகளுக்கும் மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, சிவகங்கை. ராமேஸ்வரம், திருச்செந்தூர் , திருநெல்வேலி , ராஜபாளையம் , குமுளி , தேனி ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்தின் சார்பில் , கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 02.11.2021 முதல் 04.11.2021 வரை கோவை கொடிசியா பேருந்து நிலையத்திலிருந்து சேலம் மற்றும் சேலத்தைக் கடந்தும்.
திருச்சி மற்றும் திருச்சியைக் கடந்தும் மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மற்றும் மதுரையைக் கடந்தும் , தேனி மற்றும் தேனிரையக் கடந்தும் சிறப்பு பேருந்துகளாக கீழ்க்கண்டவாறு பொது மக்கள் வசதிக்கேற்ப கூடுதலாக 230 பேருந்துகள் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கோவை – மதுரை 100 பேருந்துகள்
கோவை – தேனி – 30 பேருந்துகள்
கோவை – திருச்சி -50 பேருந்துகள்
கோவை – சேலம் -50 பேருந்துகள்