December 12, 2016 தண்டோரா குழு
முகமது நபியின் பிறந்த தினமான மிலாது நபி வாழ்த்துகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபியின் பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை(டிசம்பர் 13) கொண்டாப்படுகிறது. அவருடைய பிறந்த நாளை மிலாத்-ன்-நபி என்று உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் மிலாத்-ன்-நபி விழாவிற்கு இந்திய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் ,நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜனாதிபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்தில் கூறியிருப்பதாவது:
உலக சகோதரத்துவம், இரக்கம், கருணை, சகிப்புத்தன்மை மற்றும் நல்வாழ்க்கை ஆகியவற்றை நோக்கி வேலை செய்ய நபிகளின் செய்திகள் நமக்கு ஊக்கத்தை அளிகிறது. இந்த நன்நாளில் நபிகளின் வாழ்கையை மற்றும் கொள்கைகளை நினைவில் கொண்டு மனித சேவைக்கு நம்மை முழுவதுமாக சமர்ப்பிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
மிலாது நபி வாழ்த்துக்கள். இந்த நாளில் நம்முடைய சமுதாயத்தில் ஒற்றுமை, அமைதி மற்றும் சுபிட்சம் எப்போதும் காணப்படட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.