October 30, 2021 தண்டோரா குழு
தமிழக அரசு உத்தரவின்படி கோவையில் 7-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று கோவை மாநகராட்சி பகுதியில் 266-மையங்களில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் 90 சதவீதத்திற்கு மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியுடையவர்களாக உள்ளனர்.
கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 84-நாட்கள் முடிவடைந்தவர்கள் மற்றும் கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28-நாட்கள் முடிவடைந்தவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்குத் தொற்று தீவிரமடையாமல் தடுக்கப்படுகிறது. மேலும் 100 சதவீத பாதுகாப்பும் கிடைக்கப் பெறுகிறது.எனவே, முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தத் தகுதியுடையவர்கள் அனைவரும் 100 சதவீத பாதுகாப்பைப் பெற இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் கோவையில் சமூக ஆர்வலரும், சேவைகருமான பஞ்சாப் தமிழர் டோனி சிங் கலந்து கொண்டு தனது இரண்டாவது தடுப்பூசியை போட்டுக்கொண்டார். தொடர்ந்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வரவேண்டும், நோயிலிருந்து அனைவரும் பாதுகாக்கபட வேண்டும் என வலியுறுத்தினார்.