October 30, 2021 தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மீலாது விழாவில்,பேரிடர் கால நேரங்களில் சமூக பணியாற்றிய பல்வேறு அமைப்பினருக்கு நற்சேவை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கோவை எக்கனாமிக் சேம்பர், அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு, சந்திப்போம் பாசிட்டிவ் வெல்பர் சொசைட்டி, இஸ்லாமிய புத்தக நிலையம், ஆகியவை சார்பாக கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சமூக நல்லிணக்க மீலாது விழா நடைபெற்றது.
அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற இதில்,முனைவர் பஜ்லூர் ரஹ்மான் விழாவை தொகுத்து வழங்கினார்.சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவரும்,தமிழ்நாடு இஸ்லாமிய பைத்துல்மால் கூட்டமைப்பு மற்றும் ஸீட் அறக்கட்டளையின் தலைவருமான எஸ்.எம்.ஹிதாயத்துல்லா கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் பேரிடர் கால நேரங்களில் சமூக பணியாற்றிய பல்வேறு அமைப்பினர்களுக்கு பேரிடர் கால நற்சேவை விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆதரவற்ற மற்றும் ஏழை,எளிய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்,முக கவசங்கள் சானிட்டைசர் அடங்கிய கொரோனா கிட் மற்றும் புத்தாடைகள் இனிப்புகள் வழங்கப்பட்டது.
பின்னர் இலவச தொழிற்பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு சமூக தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியில், ஓ.பி.சி.கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் ராம வெங்கடேஷ், திராவிடன் அறக்கட்டளை நிறுவனர் கோவை பாபு,கோவை எக்கானமிக் சேம்பர் நிர்வாகிகள் இமயம் ரஹ்மத்துல்லா, ஜெய்லாப்தீன் ஹாஜியார்,வழக்கறிஞர் ஷெரீப், யூனுஸ், சிக்கந்தர் பாஷா,தாய் கல்விச்சேவைகள் ஜெகன்,தென்னிந்திய சமையல் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜயன் சிறுபான்மையினர் கிறிஸ்தவ மக்கள் அமைப்பின் அருள்தாஸ், தி.மு.க.நிர்வாகி காதர்,சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு இனாயத்துல்லா ஹாஜியார்,அஷ்ரப் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.