• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிஜ் – பிளேர் 2021 கல்லூரிகளுக்கு இடையேயான வணிக கருத்தரங்கு

October 31, 2021 தண்டோரா குழு

இந்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நிறுவனமான பயர்பேர்ட் மேலாண்மை ஆராய்ச்சி கல்வி நிறுவனம், கோயம்புத்தூர், செட்டிபாளையத்தில் அமைந்துள்ளது. இங்கு, “பிஜ்- பிளேர் 2021” என்ற, வணிக கருத்தரங்கு நடந்தது.

இளம் தொழில் முனைவோரையும் இளைஞர்களையும் தொழிலில் ஊக்கப்படுத்தி அவர்களது திறனையும், அறிவையும் மேம்படுத்துவது இந்த கருத்தரங்கின் நோக்கமாகும். இதற்கென 7 வகையான போட்டிகள் வடிவமைக்கப்பட்டன. பிஜ் – ஸ்டார்ட் -அப், பிஜ்- இன்ஸ்பையர், ஆட்-ஜேப், பிஜ் – ஹன்ட், பிஜ் – அட்டயர், போட்டோ – டேஜ்ல் மற்றும் முவி – ஸ்பார்க்கிள் என்ற 7 பொருத்தமான தலைப்புகள் தேர்வாகின.

இந்த தலைப்புகளுக்கு ஏற்றவகையில், “இளம் மற்றும் தீப்பொறி தரும் வணிக தலைவர்களுக்கான வணிக கருத்தரங்கு” என்ற கருத்தில் விவாத நிகழ்வுகள் நடந்தன. வணிக ஸ்டார்ட் அப் யோசனைகள், கவர்ச்சியான வணிக தலைவர்கள் தரும் ஊக்கங்கள், புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடுகள், விற்பனை திறமைகள் மற்றும் வணிகத்தன்மை போன்றவைகள் பல்வேறு போட்டிகளில் வெளிப்படுத்த வாய்ப்புகள் தரப்பட்டன. அதோடு, அவர்களது கற்பனைத்திறன், அலசி ஆராயும் தன்மை, வடிவமைப்பு யோசனைகள், மேடை பேச்சுக்கள், வெளிப்படுத்தும் தன்மை போன்றவைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் தரப்பட்டன.

இந்த வணிக கருத்தரங்கு, முதலீட்டாளர்கள், தேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் சிறப்புமிக்க தொழில் நிறுவனத்தினர் நடுவர்களாக செயல்பட்டனர். தென்னிந்திய அளவில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அனைத்துக்கும் மேலாக பயர்பேர்ட் நிறுவனம், வியக்க வைக்கும் வகையில், 2,50,000 ரூபாயை பரிசு தொகையாக அறிவித்திருந்தது. முதலிட வெற்றியாளர்களுக்கு தலா 20,000 ரூபாய் வீதமும், இரண்டாம் இடம் பெற்ற வெற்றியாளர்களுக்கு தலா 10,000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டன.

வணிக கருத்தரங்கு துவக்க விழா, பயர்பேர்ட் மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் லீலாவதி அரங்கில் காலை 9.30 மணிக்கு துவங்கியது. கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா ) தலைவர் எம். வி ரமேஷ்பாபு தலைமை விருந்தினராக பங்கேற்றார். கௌரவ விருந்தினராக நடன கலைஞரும் நடிகையுமான காயத்ரி கிருஷ்ணா பங்கேற்றார். பயர்பேர்ட் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பி.ஸ்ரீனிவாச ராவ் வரவேற்று பேசினார். உதவி இயக்குனர் பேராசிரியர் எஸ். ஜோதிர்லிங்கம் வணிக கருத்தரங்கின் நோக்கம் பற்றி விளக்கினார்.

கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு பேசுகையில்,

“இளம் தலைமுறையினரின் வணிக திறனை கண்டறிந்து, அவர்களது யோசனையை இந்தியாவின் ஸ்டார்ட் அப் இலக்கிற்கு பயன்படுத்த வேண்டும்,” என வலியுறுத்தினார். மாணவர்களின் திறன்மேம்பாட்டு பிரிவு டீன் பேராசிரியர் சேட்டன் பஜன், நன்றியுரையாற்றினார். மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற நிறைவு விழாவில் எக்கி ஹோமா பம்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. கனிஷ்கா ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பயர்பேர்ட் ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ்.கே சுந்தர்ராமன் விழாவுக்கு தலைமை வகித்து, தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் கனிஷ்கா ஆறுமுகம் பேசுகையில், “இது போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் தங்களது தொழில்முனையும் திறனை வெளிப்படுத்த பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.

நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ்.கே சுந்தர்ராமன், “மாணவர்கள், செயல்படுத்தும் விதத்தில் கற்கவும், புதுமையாக யோசிக்கவும், ஊக்கத்துடன் பல யோசனைகளை செயல்படுத்தவும், தங்களை சந்தையில் முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில், ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கேற்ற சிறப்பு விருந்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினர். இந்த வணிக கருத்தரங்கு மாலை 6.00 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் ராஜேஷ் ஹரி கிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க