• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பாக கோவையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்

November 1, 2021 தண்டோரா குழு

பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பாக கோவையில் ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையில் கடந்த 1990களில் 4038 சுகாதார ஆய்வாளர் நிலை ஒன்று மற்றும் 4561 சுகாதார ஆய்வாளர்கள் நிலை இரண்டு என பணியிடங்கள் என எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் இருந்தது கடந்த 2003 முதல் இந்த பணியிடங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்,பல்வேறு,தனித்திட்டங்களுக்கான ஒப்பளிக்கப்பட்ட 1002 சுகாதார ஆய்வாளர்கள், நிலை 1 பணியிடங்களை மீளப்பெற்று,அரசு ஒப்புதல் கோரி இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ஆகிய துறைகளில் 1002 சுகாதார ஆய்வாளர்கள் நிலை ஒன்று பணியிடங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதார துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு உண்ணா விரதம் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற இதில் பொருளாளர் அருண் முன்னிலை வகித்தார் இதில் கோவை,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் படிக்க