November 1, 2021 தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 199 பேருக்கு ரீட்ரோ பல்பார் என்னும் கண்ணுக்கு கீழ் ஊசி செலுத்துதல் சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் அவர்கள் கண்பார்வை இழப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:
கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை பாதிப்பிற்கு இதுவரை 416 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது 14 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 8 பேருக்கு மூளைவரை சென்ற பூஞ்சை பாதிப்பு அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
அதேபோல் பூஞ்சையால் 9 நோயாளிகளுக்கு கண்ணம் பகுதியில் அரிக்கப்பட்ட அழுகிய திசுக்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு கண்பார்வை இழப்பை தவிர்க்கும் வகையில் ரீட்ரோ பல்பார் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு ஆம்போடெரிசின் -பி என்ற ஊசி செலுத்தப்படுகிறது. அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் 199 பேருக்கு ரீட்ரோ பல்பார் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் ஒரு ஊசியின் விலை ரூ.7 ஆயிரம். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தேவையான ஊசிகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.