November 2, 2021 தண்டோரா குழு
கல்லறை திருநாள் இன்று உலகம் முழுவதும் கிருஸ்த்துவ மக்களால் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தங்கள் குடும்பங்களில் உயிரிழந்தவர்களுக்கு கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைபிடிப்பது வழக்கம் அதன் ஒருபகுதியாக கோவை சுங்கம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு கோவையில் உள்ள கிருத்துவ மக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இதற்காக கோவை சுங்கம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் முன்பாக தற்காலிகமாக மலர் கடைகளும், வாசனை திரவிய கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவதால் இன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து கல்லறைகளை பங்கு அருட்பணியாளர்கள் புனித நீரை தெளிப்பார்கள். கல்லறை திருநாளையொட்டி வழக்கத்திற்கு மாறாக அதிகமான போலிசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.