December 12, 2016 தண்டோரா குழு
முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மரண செய்தி வெளியான சமயத்திலும் கூட இவர் மகள் என ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.
கடந்த சில நாட்களாக வாட்ஸ் ஆப்பில் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் இவர் தான் ஜெயலலிதா மகள் என ஒரு செய்தி வைரலாக பரவியது. தற்போது மட்டுமல்ல பல காலமாக முதல்வரின் முகச்சாயலில் இருக்கும் இந்த பெண்ணின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.இந்த நிலையில் அப்படத்தில் இருக்கும் நபரை எனக்கு தெரியும் என்றும் அவரைப்பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் பிரபல பின்னணி பாடகி சின்மயி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது,
இந்த உலகத்துல ஒரே மாதிரி 7 பேர் இருப்பாதாக கேள்விப்பட்டிருபோம் அப்படித்தான் இவங்களும். இந்தப் படத்துல உள்ளவங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. அவங்க தமிழ்நாட்டுலயே இல்லை. பல வருஷங்களா வெளிநாட்டுல வாழ்கின்ற இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். படத்துல அந்தப் பெண்கூட இருக்கிறவர் அவருடைய கணவர் ராமநாதன். இவர் பிரபல மிருதங்க வித்வான் திருவனந்தபுரம் பாலாஜியின் , சகோதரர்ராவார்.இவர் பார்பதற்கு ஜெயலலிதாவைப் போன்று தோற்றம் உடையவர் என்பதால் யாரோ இப்படியொரு புரளியைக் கிளப்பி விட்ருக்காங்க. அந்தப் பெண்ணோட பெயரையோ, அவங்க இருக்கிற இடத்தையோகூட நான் சொல்ல விரும்பலை. அப்படிச் சொன்னா அவங்களோட நிம்மதி கெட்டுப் போயிடும் என்று சின்மயி கூறியுள்ளார்.