November 5, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் தினமும் 800 டன் முதல் 1000 டன் வரை குப்பைகள் சேர்வது வழக்கம். இதனிடையே கடந்த 4ம் தேதி தீபாவளி கொண்டாப்பட்டது.
இதனை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பறிமாறியும் தீபாவளியை கொண்டாடினார்கள். இதனால் கூடுதலாக 600 டன் முதல் 700 டன் வரை குப்பைகள் சேர்ந்தன. இதனைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான தூய்மைபணியாளர்கள் இந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘வழக்கமாக கோவை மாநகராட்சியில் 1000 டன் அளவுக்கு குப்பைகள் குவிவது வழக்கம். இந்த குப்பைகள் அனைத்தும் வாகனங்கள் மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்வது வழக்கம். தற்போது தீபாவளியை தொடர்ந்து கூடுதலாக 700 டன் குப்பைகள் சேர்ந்தன. இந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன,’’ என்றார்.