November 6, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு பரவுதலைத் தடுக்க தினந்தோறும் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.
கழிவுநீர் செல்லும் இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் அனைத்து நீர்தேக்கத்தொட்டிகளிலும் அபேட் மருந்து ஊற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தெருக்கள், வீடுகளில் மழை நீர் படும்படி வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட வேண்டும். பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், மண்பாண்டங்கள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.