November 9, 2021 தண்டோரா குழு
தமிழகததில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தலைநகரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க்ளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் மேலும் கோவை உட்பட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
இந்த நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கோவையில் உள்ள குளங்கள் அனைத்தும் வேகமாக நிறம்பி வருகிறது.குறிப்பாக கோவை உக்கடம் வாளாங்குளமானது முழுமையாக நிறைந்து சாலையை தொடும் தருவாயில் உள்ளது. இன்றும் கோவை மாவட்டத்தில் மழை தொடரும்பட்சத்தில் குளம் நிறைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடும் ஆபத்து உள்ளது.
வாளாங்குளத்தை பொருத்தவரை கோவை அரசு மருத்துவமனை, கோவை திருச்சி சாலையை இணைக்கும் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், போக்குவரத்து பெருமளவில் பாதிக்கும் அபாயம் உள்ளது.மேலும் உக்கடம் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள குடியிருப்புகளுக்குள்ளும் குளத்துநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மாவட்ட நிர்வாகமும், கோவை மாநகராட்சியும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் ஆபத்தை உணராமல் பொதுமக்களும் இந்த பகுதியில் குளத்தில் ஓரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பதும் விளையாடுவதுமாக உள்ளார்கள். உடனடியாக இப்பகுதியில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.