November 12, 2021 தண்டோரா குழு
கோவையில் இயற்கை சீற்றங்களில் இருந்து பொது மக்களை காப்பாற்றும் பொருட்டு பேரிடர் மீட்பு படையினர் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி.செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. பருவ மழையை முன்னிட்டு தமிழகத்தில் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் தயார் நிலையில் இருக்கும்படி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து பொது மக்களை காப்பாற்றும் பொருட்டு பேரிடர் மீட்பு படையினர் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட எஸ்.பி.
செல்வனகரதினம் கூறியதாவது:-
கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து பொது மக்களை மீட்க 7 குழுக்கள் தயாராக உள்ளனர். இவர்களுக்கு தேவையான நவீன உபகரணங்களை கூடுதல் டி.ஜி.பி வன்னியபெருமாள் வழங்கியுள்ளார்.
இதில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சுதாகர் டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மீட்பு படையினர் மழை சேதம் ஏற்படும் உள்ள இடங்களுக்கு அருகில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கூறியுள்ளார்.