November 13, 2021 தண்டோரா குழு
ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் மற்றும் அன்னை மருத்துமனை இணைந்து சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் கோவையில் நடைபெற்றது.
உலகம் முழுவதும் நவம்பர் 14 தேதி முழுவதும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கபடுகிறது.இந்நிலையில் கோவை ராஜ வீதியில் உள்ள அன்னை மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் மருத்துவமனையின் தலைவர் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் கே.எஸ்.மகேஸ்வரி, தலைமை மருத்துவர்,சி.டி.செந்தில் நாதன் மற்றும் மருத்துவமனையின் இயக்குனரும்,உடல் பருமன் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பால முருகன் தலைமை ஆகியோர் தாங்கினா். ரோட்டரி மெரிடியன் தலைவர் மதன கோபால் சிறப்புரையாற்றினார்.
சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முகாமில் கலந்து கொண்டவர்களிடம் சர்க்கரை நோய் குறித்த பல்வேறு சந்தேகங்கள் மற்றும் மருந்துகள் எடுத்து கொள்ளும் முறை,உணவு கட்டுப்பாடு என பொதுமக்களின் கேள்விகளுக்கு சிறப்பு மருத்துவர் பிரேம் பால குரு விளக்கமளித்தார். தொடர்ந்து முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சாப்பாட்டிற்கு முன் பின் என சர்க்கரை நோய் இரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மாதிரி உணவு பட்டியல் மற்றும் டயாபடிக் புரோட்டின் பவுடர் இலவசமாக வழங்கப்பட்டது.காலை துவங்கி மாலை வரை நடைபெற்ற சிறப்பு முகாமில்,ராஜ வீதி,செல்வபுரம், காந்திபார்க் என பல்வேறு பகுதகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்தனர்.