November 15, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதிகளில் கழிவுகளை தூர்வாருவதற்கு மாநகராட்சி சார்பாக சூப்பர் சக்கர் வாகனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்வதற்கும், கழிவுகளை தூர்வாருவதற்கும் அதிக திறன் கொண்ட கழிவுநீர் உந்து மற்றும் அடைப்புகளை சரி செய்யும் சூப்பர் சக்கர் வாகனம் கோவை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வாகனம் அதிக நீரேற்று திறன் கொண்ட பம்பு அதாவது மணிக்கு 85000 லிட்டர் உறிஞ்சும் திறன் கொண்டது. இவ்வாகனம் கழிவு நீரை மறுசுழற்சி செய்து திரும்ப உபயோகிக்கும் அமைப்பினை கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.