• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பள்ளிகளில் பாலியல் தொல்லை: ‘உதவி எண் குறித்து விழிப்புணர்வு தேவை’ – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

November 15, 2021 தண்டோரா குழு

கோவையில் பாலியல் வழக்கில் தொடரபுடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

கோவை காளப்பட்டி,அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி கலந்துகொண்டு கணினிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசுகையில்;-

7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, சமூக நீதியை நிலை நாட்டியது நமது தமிழக முதல்வரை அடித்துக்க யாரும் இல்லை. மற்ற மாநிலங்கள் போற்றும் வகையில் தமிழக முதல்வர் உள்ளார்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். அது அரசின் கடமையும் கூட,மாணவ மாணவியர்.,படிப்பு படிப்பு என்று இருக்க வேண்டும். ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகளை, பள்ளி செல்வங்களாக, 2 பெற்றோராக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

படித்து சென்ற பள்ளிக்கு நீங்களும் எதாவது செய்ய வேண்டும், என்ற எண்ணங்கள் இருக்க வேண்டும். இல்லம் தேடி கல்வி மூலம் 2 லட்சத்து 60 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் இதில், நானும் ஒருவன் என்றார்.

இதைத்தொடர்ந்து பேட்டியின் போது அவர் கூறுகையில்;-

CSR activity மூலமாக பல தன்னார்வ அமைப்புகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல உதவிகளை செய்து வருகின்றன.இன்னும் அதிக உதவிகள் கிடைக்கபெற்று வருகிறது.CSR மூலமாக பல உதவிகள் இன்னும் கிடைக்க, அதற்கென்று ஒரு தனியாக செயலி உருவாக்கப்படும்.அதன் மூலமாக இன்னும் முறையாக, தேவைகேற்ப உதவிகள் கிடைக்கும்.

கோவையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற பாலியல் துன்பறுத்தல் சம்பந்தமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணைக்காக அந்த பள்ளிக்கு சென்ற போது பள்ளி நிர்வாகம் மலுப்பலான பதில் அளித்துள்ளது.பின்னர் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.குற்றம் செய்பவர்கள்
கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும்..

இது போன்ற பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களிலும் ஹெல்ப்லைன் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது தொடர்பாக மாணவர்களுக்கு அதிகபடியான விழிப்புணர்வு இல்லை. பள்ளிகள் இன்னும் முழுவீச்சில், முழுமையாக திறந்த பிறகு அது தொடர்பான விழிப்புணர்வுகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும்.

பல இடங்களில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் மற்றும் உடனடியாக பள்ளி கட்டணம் கட்ட வேண்டும் என்பது தொடர்பாக புகார்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது.இது தொடர்பாக அரசு தொடந்து அது போன்ற கல்வி நிறுவனங்கள் மீது எச்சரிக்கை விடுப்பது மட்டுமல்லாமல் நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்க ஒரு பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படும்.வரும் 19 ஆம் தேதிக்கு பிறகு அதுபோன்ற அறிவுப்புகள் பள்ளி கல்வி துறை சார்பாக வெளியிடப்பட்டு முறையாக மாணவர்களுக்கு புகார் தெரிவிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், எக்ஸ்ரோ இயக்குநர் பாலசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க