November 16, 2021 தண்டோரா குழு
பள்ளி ஆசிரியராலேயே பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி தற்கொலை செய்து இறந்து போன கோவை மாணவி படித்த பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்தக் கோரியும், அப்பள்ளியில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களையும் இளஞ்சிறார் நீதி சட்டம்-2015 படி விசாரணைக்கு உட்படுத்தி தக்க தண்டனை வழங்கவும் நாம் தமிழர் கட்சி கோவை மாவட்ட மகளிர் பாசறை சார்பாக ஆட்சியர் சமீரனிடம் மனு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் வகாப்,மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா,மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பேரறிவாளன், மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர்களான நர்மதா, அபிராமி,வசந்தி,யாசுமீன்,ரம்யாஸ்ரீ,தென்றல் ஆகியோரும்,கட்சியின் மாவட்ட,தொகுதி பொறுப்பாளர்களான செல்வராசு, வெள்ளியங்கிரி,லிங்கராஜ்,லலித்,கௌதமசிங்க ராஜ்,அசோக் குமார், சின்னதம்பி, ஜமேசு,நேரு,விஜயவர்மன்,ஜாகின் ஹூசைன்,சுரேஷ் குமார், சதீஷ்குமார், மோகன்பிரசாத்,ஷியாம் பிரகாசு, வில்சன், சசிக்குமார்,சலீம்,இளங்கோ,குழந்தைசாமி,தங்க மாரியப்பன்,விக்னேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.