November 16, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“கோவை மாவட்டத்தில் இரண்டு பேர் பன்றி காய்ச்சல் தொற்று மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக மாவட்ட சுகாதார மருத்துவக்குழு, நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், பன்றி காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்ட இரு நோயாளிகளுக்கு ஏற்பட்ட தொற்று வீரியம் குறைவான இன்பலுயன்சா-ஏ வகையே அன்றி பன்றிகாய்சால் அல்ல என்பது உறுதியாகியுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை
இன்ப்லூயன்சா தொற்று பதிவான
இடங்களில், மருத்துவ முகாம்
நடத்தப்பட்டு அந்தப்பகுதிகளில் வேறு யாருக்கும் நோய்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கிருமிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் பரவும் தொற்று நோய்களைத் தவிர்க்க பொதுமக்கள் அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், அதிகம் பயன்படுத்தும் இடங்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், வைட்டமின் C சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் முதலிய தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.