November 17, 2021 தண்டோரா குழு
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பாரம்பரிய செண்டை மேளத்துடன் ஐயப்ப பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் மாலை போட்டு வருகின்றனர்.இதில் கன்னிசாமி களும் கலந்து கொண்டுள்ளனர்.
கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் விரதம் துவங்க இருக்கின்றனர்.சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை 1ம் தேதி துவங்கி மண்டல பூஜைகள் நடக்கும். தொடர்ந்து தை ஒன்றாம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, ஐயப்பனை சென்று தரிசனம் செய்கின்றனர்.கார்த்திகை முதல் நாளான இன்று கோவையில் உள்ள ஐயப்பன் கோவில்களில் குருசாமிகள் முன்னிலையில் மாலை அணிந்து கொள்கின்றனர்.இதற்கான துளசி மணி மாலை, கருப்பு வேட்டி, துண்டு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நேற்று சூடு பிடித்திருந்தது. இன்று அதிகாலை முதல், ஐயப்பன் கோவில் அல்லது விநாயகர் கோவில்கள் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்க உள்ளனர்.