November 17, 2021 தண்டோரா குழு
கோவையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு இடங்களில் இடி மின்னனுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ள நிலையில் கோவையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு இடங்களில் இடி மின்னனுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயுள்ளனர்.
கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காந்திபுரம், சிவானந்தாகாலனி போத்தனூர், உக்கடம், வடகோவை, ஆர்எஸ் புரம், சிங்காநல்லூர், துடியலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்ந்து வருவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மழையில் நனைந்தபடி செல்கின்றனர்.
கோவையில் பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.