• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எச்டிஎப்சி மீச்சுவல் பண்ட் புதிய நிதி வெளியீடுஎச்டிஎப்சி மல்டி கேப் பண்ட் திட்டம் !

November 20, 2021 தண்டோரா குழு

எச்டிஎப்சி சொத்து மேலாண்மை நிறுவனம், இந்தியாவின் ஒரு முன்னணி மீச்சுவல் பண்ட் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. 4.48 டிரில்லியன் டாலர் சொத்துக்களை மேலாண்மை செய்து வரும் இந்த நிறுவனம், புதிய நிதி திட்டமான எச்டிஎப்சி மல்டி கேப் நிதி ஒன்றை துவக்குகிறது.

சிறு, நடுத்தர, பெரும் மூலதனங்களைக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த நிதி பயனுள்ளதாக இருக்கும். குறைந்த பட்சம் 25 சதம் அளவில் இந்த நிறுவனங்களின் முதலீடுகள் இருக்கும். 25 சதம் நிதி மேலாளர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் பங்கு விகிதம் அமையும். இப்புதிய நிதி வெளியீடு நவம்பர் 23, 2021 ல் துவங்குகிறது. டிசம்பர் 7, 2021 ல் நிறைவு பெறுகிறது.

பல்வேறு சந்தை முதலீட்டு பிரிவுகளில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள், பல்வேறு சமயங்களில் மாறுபடுகின்றன. கடந்த 16 நிதியாண்டுகளில் (FY06 to FY21), பெரும் மூலதன நிறுவனங்கள் பங்குகள் 6 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. நடுத்தர மூலதன நிறுவனங்கள் பங்குகள் 3 ஆண்டுகளும், சிறு நிறுவனங்களின் மூலதன பங்குகள் 7 ஆண்டுகளாகவும் நல்ல முறையில் செயலாற்றியுள்ளன.

பல்வேறு முதலீட்டாளர்கள் சரியான, பெரும், நடுத்தர, சிறு மூலதன பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வது எளிதானதாக இருக்கவில்லை. எச்டிஎப்சி மல்டி கேப் நிதியானது, இந்த வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு தற்போது வழங்குகிறது. ஒரே நிதி திட்டத்தில் 3 வகையான முதலீடுகளை சம அளவில் முதலீடு செய்து மேலாண்மை செய்ய உகந்ததாக இந்த திட்டம் இருக்கும். பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் / மந்த நிலையில் செயல்படும் வேறுபட்ட மூலதன பங்குகளை ஆராய்ந்து அதில் கவனம் செலுத்த இந்த மல்டி கேப் அணுகுமுறை உதவும்.

எச்டிஎப்சி மல்டி கேப் நிதியானது, பங்குகளை தேர்வு செய்வதில் கீழ் நிலையில் உள்ள பங்கு முதல் மேல்நிலை பங்குவரை கலவையாக மேற்கொள்ளவிருக்கிறது. தற்போதைய திட்டத்தின்படி, ஒட்டுமொத்த முதலீட்டில் 60 சதம் – 75 சதம் பெரிய மற்றும் நடுத்தர நிறுவன பங்குகளிலும், 25 சதம் – 40 சதம் வரை சிறு மூலதன நிறுவனங்களிலும் முதலீடு செய்ய திட்டமிட்டள்ளது. வளர்ச்சிக்கான, மதிப்புமிக்க, திருப்பங்கள் கொண்ட நிறுவனங்களில் உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து இந்த முதலீடு அமையும்.

தற்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப திட்டங்கள், ஒதுக்கீடுகளில் மாற்றங்கள் இருக்கும். விதிமுறைகள் அனைத்தும் திட்ட தகவல்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதி திட்டத்திற்கான மேலாளராக கோபால் அகர்வால் செயல்படுவார். 19 ஆண்டுகள் நிதி மேலாண்மை மற்றும் பங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

எச்டிஎப்சி மல்டி கேப் பண்ட் பற்றி கோபால் அகர்வால்,

“பல்வேறு சந்தை நிலைகளில் பல்வேறு அளவிலான மூலதனங்களை கொண்ட நிறுவனங்களின் பங்குகளை கவனித்து வந்துள்ளோம். எச்டிஎப்சியின் இந்த மல்டி கேப் திட்டமானது, ஒழுங்குமுறையில் பல்வேறு மூலதன நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஒரே நிதியாக இருக்கும்.

நீண்ட கால அடிப்படையிலான பன்னோக்கு செயல்பாடுகளில், மாற்றம் பெறும் சூழ்நிலைகளில் இது சிறந்த தீர்வை தரும். இந்தியாவின் முன்னேற்றமான பாதை, சாதகமான சூழ்நிலைகள் நாட்டின் வளர்ச்சிக்கானதாக உள்ளது. நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையிலான இந்த பங்கு முதலீடு நல்ல பலனை தரும்,” என்றார்.

மேலும் படிக்க