November 20, 2021 தண்டோரா குழு
இந்திய தொழில் கூட்டமைப்பு அதன் வளர்ச்சி முயற்சிகளின் ஒரு பகுதியாக சிஐஐ ஹெல்த்கேர் ஸ்டார்ட்-அப் கனெக்ட், தி பியூச்சர் ஆப் ஹெல்த், ஹெல்த் கேர் வழங்குநர்கள், தொழில்நுட்ப வீரர்கள், ஸ்டார்ட்-அப்கள், நிதி நிபுணர்கள், இன்சூரன்ஸ் வீரர்கள் மற்றும் பலரை இணைக்கும் ஒரு சிறப்பு முயற்சியை துவங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக காணொளி காட்சி மூலமாக கருத்தரங்கு நடந்தது.இதில் சிஐஐ கோவை மண்டலம் மற்றும் முழு நேர இயக்குநர் அர்ஜுன் பிரகாஷ்,மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஹெல்த் பேசிக்ஸ் இணை நிறுவனர் ஸ்வாதி ரோஹித், சிஐஐ கோவை – ஹெல்த்கேர் பேனல் கன்வீனர் மற்றும் பிஎஸ்ஜி மருத்துவமனைகள் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன், சிஐஐ தமிழ்நாடு, நிறுவனர் மற்றும் செயல் தலைவர், காவேரி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ் சந்திரகுமார், முன்னாள் சிஐஐ தலைவர் மற்றும் ஆக்சிலர் வென்ச்சர்ஸ் தலைவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இவர்கள் பேசுகையில், ‘‘ வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக சுகாதாரத்துறை மாறியுள்ளது.மாற்றங்களுக்கு ஏற்ப சுகாதாரம் மிகவும் மெதுவாக இருந்தது.
கடந்த பத்தாண்டுகளில் மருத்துவத் துறையில் துணிகரத்தின் போக்கு மாறி வருவதைக் காண்கிறோம். இந்தியாவில் தரமான மற்றும் மலிவு விலையில் மருத்துவம் வழங்கக்கூடிய ஒரு இடம் இருந்தால், அது கோவை தான்,’’ என்றனர்.