December 14, 2016
தண்டோரா குழு
மகள் திருமணத்திற்காக ஒளரங்கபாத்தை சேர்ந்த தொழிலதிபர் 90ஏழைகளுக்கு வீடுகள் கட்டிதர முன்வந்துள்ள செய்தி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநில பிஜேபி கட்சியின் முன்னாள் மந்திரி ஜனார்த்தன் ரெட்டி 650 கோடி ரூபாய் செலவில் தனது மகளின் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தினார். அதை பலர் விமர்சித்துள்ளனர், பலர் கடிந்து கொண்டுள்ளனர்.
நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1,000 ரூபாய்நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்தபிறகு மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். பண தட்டுப்பாட்டால் நாட்டின் பல இடங்களில் வெறும் 500 ரூபாயில் திருமணங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஔரங்கபாத்தில் ஆடை நிறுவனம் நடத்தி வரும் பிரபல தொழிலதிபர் அஜே முன்னோட் தனது மகள் ஸ்ரேயாவின் திருமண விழாவிற்கு 60 முதல் 70 லட்சம் செலவு செய்ய நினைத்தார். எனினும், திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்தலாம் என்று நினைத்துள்ளார். அப்போது ஏழை மக்கள் மன நிறைவடையும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று தந்தையும் மகளும் யோசித்தனர். இதையெடுத்து குடிசை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 90 வீடுகளை கட்டி கொடுக்க முடிவெடுத்தனர்.
இது குறித்து முன்னோட் கூறும்போது :
திருமணம் போன்ற சுபகாரியங்களில் இது போன்ற மனநிறைவான செயல்களில் அனைவரும் ஈடுபட வேண்டும். சமுதாயம் குறித்து நமக்கு சில கடமைகள் உண்டு என்பதால் அதை நாம் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். என கூறினார்.
தந்தையின் முடிவில் சம்மதம் தெரிவித்த ஸ்ரேயா, இந்த முடி எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை என் திருமண பரிசாக நினைக்கிறேன் என்றார்.