• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரயில் மோதி யானைகள் உயிரிழந்த இடத்தில் தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் ஆய்வு

November 30, 2021 தண்டோரா குழு

கோவை நவக்கரையில் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த இடத்தில் தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த நவகரை பகுதியில் ரயில் மோதி கர்ப்பிணி பெண் யானை உட்பட மூன்று யானைகள் உயிரிழந்தது. இது தொடர்பாக ரயில் ஓட்டுநர்கள் சுபைர், அகில் ஆகிய இருவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்பிணி பெண் யானை , மக்னா யானை, குட்டி பெண் யானை என 3 யானைகள் பலியான விவகாரம் வன ஆர்வலர்கள்,பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் ரயில் மோதி யானைகள் பலியாகும் இதுபோன்ற மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ரயில் மோதி யானைகள் உயிரிழந்த இடத்தில் தமிழக முதன்மை தலைமை வனப பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது விபத்து நடந்த பகுதியில் உள்ள “ஏ” மற்றும் “பி” ஆகிய இரு ரயில் பாதைகளிலும் கூடுதல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் வனத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் இரவு நேரத்தில் வன ஊழியர்களின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், கண்காணிப்பு பணியை தெர்மல் டிரோன் கேமராக்கள் மூலமும் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.விபத்து ஏற்பட்ட பகுதியில் வன ஊழியர்கள் மேற்கொண்ட பணிகளையும் கேட்டறிந்தார்.

மேலும் படிக்க