• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒமைக்ரான் வைரசை எதிர்கொள்ளும் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

December 2, 2021 தண்டோரா குழு

ஓமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் கோவை விமான நிலையத்தில் ஏற்கனவே தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து பேட்டியளித்த அவர்,

மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து கடுப்பாடுகளுக்கு தற்போது அவசியம் இல்லை.தடுப்பூசி போடுவதில் நாட்டில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது.முதல் தவனை தடுப்பூசி 78%, இரண்டாம் தவனை தடுப்பூசி 44% என்ற அளவில் உள்ளது. கோவை தடுப்பூசி போடுவதில் மாநிலத்தில் முதலாவதாக உள்ளது. டெங்குவிற்கு 617 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

தடுப்பூசி போடுவதில் தமிழகம் ஒரு இயக்கமாக செயல்படு வருகிறது. தமிழக முதல்வரே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தமிழகத்தில் 3.2 லட்சம் டேத்பாக் கிட்டுகள் கையிருப்பில் உள்ளது.மேலும் ஒரு லட்சம் கிட்டுகள் வரவழைக்கப்பட உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கி வருபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக சோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஒமைக்க்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை4 கோடி செலவில் உருவாக்கப்பட மரபணு சோதனை கூடமும் தமிழகத்தில் உள்ளது. ஒமைக்ரான் வைரசை எதிர்கொள்ளும் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது.மக்கள் அச்சம் அடைய வேண்டாம். ஒமைக்ரான் வைரஸ் செய்தி அறிந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த முதல்வர் அறிவுறித்தினார்.

பல வகையான வைரஸ் உருமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனாவும் உருமாறியுள்ளது. காலையில் மதுரை, திருச்சியை தொடர்ந்து தற்போது கோவை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர் டி பி சி ஆர் உள்ளிட்ட முழுமையான சோதனை செய்யப்படுகிறது.பரிசோதனை முடிந்தும் வீட்டு கண்காணிபில் இருப்பார்கள் என தெரிவித்தார்.

மேலும் படிக்க