• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விரைவில் பொள்ளாச்சியில் ஹாட்டர் பலூன் திருவிழா – அமைச்சர் மதிவேந்தன்

December 3, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு ஹோட்டல்கள் ஆன்லைன் புக்கிங் மூலம் 22 லட்சம் ரூபாய் வருமானம் வந்துள்ளதாகவும், விரைவில் பொள்ளாச்சியில் ஹாட்டர் பலூன் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

கோவை உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளம் ஆகிய இரண்டையும் ஆய்வு செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளததில் படகு வசதி செய்து தருகிறோம் என அறிவித்திருக்கிறோம் எனவும் அதனால் வருங்காலத்தில் படகு வசதி செய்ய இரண்டு குளங்களிலும் சாத்திய கூறுகள் என்னென்ன உள்ளன என்பதை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்..மேலும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் 75 சதவீதம் பணிகள் நிறைவுற்று இருக்கின்றன.

மீதமுள்ள 25 சதவீதம் பணிகள் முடிந்து ஒமிக்ரான் தொற்று பரவல் நின்றவுடன் சுற்றுலா துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும். கொரோனோ தொற்று பரவல் காரணமாக வேகமாக செய்ய முடியவில்லை. சுற்றுலா துறைக்கென முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்ததன் பேரில் முதல்வர் தனி நிதி ஒதுக்கியிருப்பதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் உள்ளூர் சுற்றுலா துறையை மேம்படுத்த வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்து நடைமுறை படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கூறிய மதிவேந்தன்,ஒரு மாத்ததிற்குள் தமிழ்நாடு ஹோட்டல்கள் புதுப்பிக்கபடும் பணி நிறைவுறும் எனவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாத்துறையில் வருவாயை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஹோட்டல்களில் சொமேட்டோ, சுவிக்கி போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் உணவு பெற நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் ஆன்லைன் மூலம் தமிழ்நாடு ஹோட்டல்களில் புக் செய்ததால் மட்டும் 22 லட்சம் வருவாய் வந்துள்ளதாக குறிப்பிட்டார். மெக்சிகோ நாட்டில் நடந்த ஹாட்டர் பலூன் திருவிழாவில் இந்தியாவிலே தமிழ்நாடு மட்டும் தான் கலந்து கொண்டதாகவும்,விரைவில் பொள்ளாச்சியில் ஹாட்டர் பலூன் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அப்போது தெரிவித்தார்.

தொடர்ந்து கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள தமிழ்நாடு ஹோட்டலை ஆய்வு செய்த அமைச்சர் மதிவேந்தன் சுற்றுலாத்துறை அலுவலகத்தில் உள்ள கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் படிக்க